Home இலங்கை அரசியல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு

0

இலங்கையின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுக கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியாவில் (Vavuniya) அமைந்துள்ள தனியார்
விருந்தினர் விடுதியில் இன்று (16) குறித்த நிகழ்வு நடைபெற்றது.

கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் (Gajendrakumar Ponnambalam) தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

வேட்பாளர் குழு

வன்னி மாவட்டத்தில் இம்முறை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளராக சு.தவபாலன் போட்டியிடுகின்ற நிலையில் எ.செல்வநாயகம், றொசின்
பெர்ணான்டோ, தி.கிந்துயன்,
தே.தினேஸ்குமார், பா.ஆனந்தபிரசாத், ச.ரகுமதி, சோ.பிரசாத், அ.ரொணிடிமல் ஆகியோர் ஏனைய வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி களமிறங்குகின்றது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/tnpf-vanni-district-candidate-introducing-event-1729069889

NO COMMENTS

Exit mobile version