Home இலங்கை சமூகம் கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

0

கொழும்பு (Colombo)  நகரம் உட்பட பல புறநகர்ப் பகுதிகளுக்கு இன்று (25) 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அறிவிப்பை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (National Water Supply and Drainage Board) தெரிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய மேம்பாட்டு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.

 12 மணி நேரம் நீர் வெட்டு 

இதன்படி, இன்று காலை ​8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

கொழும்பு 1 முதல் 15 வரையிலான பகுதிகளிலும், கோட்டே, கடுவலை, பத்தரமுல்லை, கொலன்னாவ, கொட்டிகாவத்த, முல்லேரியா, IDH, மஹரகம, தெஹிவளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version