Home இலங்கை பொருளாதாரம் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி! ஒரே நாளில் பாரிய பின்னடைவு

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி! ஒரே நாளில் பாரிய பின்னடைவு

0

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(07) நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றையதினம் 289.72 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதியானது இன்றையதினம் 291.32 ரூபாவாக சடுதியான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.  

இந்த நிலையில், நேற்றையதினம் 298.41 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரொன்றின்  விற்பனை பெறுமதியானது இன்றையதினம் 299.92 ரூபாவாக அதிகரித்துள்ளது.  

விற்பனைப் பெறுமதி 

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363.13 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 377 .21 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.65 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 313 .20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.80 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 210.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180.17 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 189.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version