Home இலங்கை பொருளாதாரம் மாற்றம் கண்ட தங்க விலை : தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்

மாற்றம் கண்ட தங்க விலை : தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்

0

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் அதிகரித்து வந்த எண்ணெய் விலை இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ள நிலையில், தங்க விலையிலும் இன்று (26) சிறிய அளவில் அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்க விலை 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தங்க விலை

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 248,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,100 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version