Home முக்கியச் செய்திகள் தங்க விலையில் திடீர் வீழ்ச்சி : வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

தங்க விலையில் திடீர் வீழ்ச்சி : வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

0

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இந்த நிலையில் இலங்கையில் தொடர்ச்சியாக அதிகரித்த தங்கத்தின் விலையானது இன்று (18) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. 

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய தங்க நிலவரம்

இன்றைய (18.07.2024) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 749,174 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,430 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 211,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,230 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ( 22 karat gold 8 grams) 193,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,130 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 185,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு விபரங்கள்

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 199,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 184,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/today-gold-price-in-srilanka-and-world-gold-market-1721284289?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version