Home முக்கியச் செய்திகள் சடுதியாக குறைவடைந்த தங்க விலை: வெளியான மகிழ்ச்சி தகவல்

சடுதியாக குறைவடைந்த தங்க விலை: வெளியான மகிழ்ச்சி தகவல்

0

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியாக குறைவடைந்துள்ளது.

இதனடிப்படையில், இன்றைய (10) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 697,294 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய நிலவரம்

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 24,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 196,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 22,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)180,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 21,530 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 172,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/today-gold-rate-usd-world-market-dollar-price-1717995794?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version