Home இலங்கை அரசியல் இன்று முடிவாகும் நாமலின் அரசியல் எதிர்காலம்! கொழும்பை முடக்கக் காத்திருக்கும் மகிந்த தரப்பு..

இன்று முடிவாகும் நாமலின் அரசியல் எதிர்காலம்! கொழும்பை முடக்கக் காத்திருக்கும் மகிந்த தரப்பு..

0

கொழும்பில் இன்று(21) நடைபெறவுள்ள அரச எதிர்ப்பு போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என புலனாய்வுத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது அதிருப்தி அடைந்த நிலையில், மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடுவார்கள் என போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த போராட்டத்திற்கு சில ஆயிரக்கணக்கானவர்களே கலந்து கொள்வார்கள் என அரச புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறான எண்ணிக்கையில் மக்கள் ஒன்றுகூடினால் இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போராட்டம் தோல்வி அடைந்ததாகவே அமைந்து விடும்.  

NO COMMENTS

Exit mobile version