Home இலங்கை அரசியல் அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று..!

அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று..!

0

அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை இன்று (04) பி.ப 9.30 மணி வரை நடத்துவதற்குக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவாதமானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பி.ப 5.30 மணி முதல் பி.ப 9.30 மணிவரை நடத்துவதற்கு சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் நேற்று (03) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கொள்கைப் பிரகடனம் தொடர்பான வாக்கெடுப்பு

இந்நிலையில் முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் இன்று (04) மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வாக்கெடுப்பு பி.ப 5.00 மணிக்கு இடம்பெறும்.

வாக்கெடுப்பு முடிவடைந்ததும் பி.ப 5.30 மணிக்கு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் அனர்த்த நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version