Home இலங்கை அரசியல் இன்றைய நாடாளுமன்ற அமர்வு : இடம்பெறவுள்ள முக்கிய விவாதம்

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : இடம்பெறவுள்ள முக்கிய விவாதம்

0

இன்றைய (05.08.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.

காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 06.00 வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை11.30 முதல் மாலை 04.00 வரை காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

மாலை 04 மணிக்கு தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதுடன் 4.15 முதல் 5.30 வரை மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படவுள்ளதுடன் நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாலை 5.30 முதல் 06.00 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.youtube.com/embed/6a3yKZQ8oFg

NO COMMENTS

Exit mobile version