Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள் – நேரலை

நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள் – நேரலை

0

நாடாளுமன்றம் (Sri Lanka Parliament) இன்று (21) முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை கூடவுள்ளதுடன் இன்றைய நாளுக்கான அமர்வு காலை 9.30 முதல் மாலை 5.30 வரை இடம்பெறும்.

இதன்படி, காலை 9.30 முதல் முற்பகல் 10 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இன்று முற்பகல் 11 மணி முதல் முற்பகல் 11.30 வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிளீன் சிறிலங்கா திட்டம் 

அதன்பின்னர், முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்று, நாளை வரை இரண்டாவது நாள் விவாதத்துக்காக ஒத்திவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, நாளை முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இரண்டாவது நாளாகவும் இடம்பெறும்.

எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 9.30 முதல் காலை 10 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 அனுதாபப் பிரேரணை

அதனையடுத்து, பிற்பகல் 3.30 முதல் மாலை 5.30 வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக முழு நாளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன் (R.Sampanthan), ருக்மன் சேனாநாயக்க (Rukman Senanayake), ரொஜினோல்ட் பெரேரா, சிறினால் த மெல் மற்றும் மொஹமட் இல்யாஸ் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/5k91fq_pilE

NO COMMENTS

Exit mobile version