இன்றைய நாளுக்கான (08.01.2025) நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
அதன்படி முற்பகல் 09.30 முதல் 10.00 வரை பிரதம அமைச்சரிடம் 04 வினாக்கள் கேட்கப்படும்.
முற்பகல் 10.00 மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான 05 வினாக்கள் கேட்கப்படும்.
முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 5.00 வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் கட்டளை, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளன.
பிற்பகல் 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான இரு வினாக்கள் கேட்கப்படவுள்ளன.
இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரம்
https://www.youtube.com/embed/0gddXKEN1Bg