Home இலங்கை அரசியல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி: நாடாளுமன்றில் சிறீதரன் சீற்றம்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி: நாடாளுமன்றில் சிறீதரன் சீற்றம்!

0

கொழும்பு மாவட்டத்திலுள்ள ஜேர்மன் தொழிற்பயிற்சி சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில் போரின் பாதிப்புக்களை எதிர்கொண்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்பயிற்சி நிறுவனம் வளப்பற்றாக்குறையுடன் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(3) நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனம் தற்போது வரை இலங்கை அரசாங்க வர்த்தமானி மூலம் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்தநிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட போது 97 ஆக இருந்த பணியாளர்கள் தற்போது 76 ஆக குறைந்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version