Home இலங்கை அரசியல் நான் என்ன அப்பக்கோப்பையா: யாழில் சீறிப்பாய்ந்த இளங்குமரன் எம்.பி

நான் என்ன அப்பக்கோப்பையா: யாழில் சீறிப்பாய்ந்த இளங்குமரன் எம்.பி

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று நிகழ்வு ஒன்றில் வலு சக்தி அமைச்சர் குமார
ஜெயக்கொடி கலந்துகொண்டு உரையாற்றிய போது தடையின்றி
24 மணி நேர மின்சாரத்தை வழங்குவதாக கூறினார். 

வலு சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கூறி சிறிது நேரத்தில் மின்தடை ஏற்பட்டது.

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று (29.03.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரிப்பை நிற்பாட்டி விட்டு மின்தடை 

இந்த விடயத்தை ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தியிருந்த நிலையில், ஊடகவியலாளர்களை நோக்கி
வந்த இளங்குமரன் எம்.பி (Ilankumaran) “ரிப்பை
நிற்பாட்டி விட்டு மின்தடை என்று கூறுகின்றீர்கள். நான் என்ன அப்பக்கோப்பையா” என சீறினார்.

இதனிடையே ஊடகவியலாளர்கள் மின்சார துண்டிப்பு தொடர்பில் மின்சார சபையுடன் தொடர்பு கொண்டே செய்தியினை உறுதிபடுத்தியிருந்தனர்.

பின்னர் உண்மையிலேயே மின் தடை ஏற்பட்டதை உணர்ந்த நிலையில் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரினார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்கள் “நாம் செய்தியினை வெறுமனே உறதிபடுத்தாது வெளிப்படுத்தவில்லை, நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு முதலில் மின்சார சபையை கேட்டுவிட்டு ஊடகவியலாளர்களுடன் இவ்வாறு பேசியிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

https://www.youtube.com/embed/q_fHnl2TMPU

NO COMMENTS

Exit mobile version