Home முக்கியச் செய்திகள் இன்றைய வானிலை: பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இன்றைய வானிலை: பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (13.10.2024) வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Source: https://ibctamil.com/article/today-weather-in-sri-lanka-1728780894?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version