Home முக்கியச் செய்திகள் காலநிலையில் திடீர் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

காலநிலையில் திடீர் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

0

புதிய இணைப்பு

இலங்கையைச் (srilanka) சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றிலிருந்து (27 ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

முதலாம் இணைப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/today-weather-report-sl-tamil-meteorology-1727395810?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version