Home இலங்கை பொருளாதாரம் நாளைய தினம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

நாளைய தினம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

0

 எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நாளைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நிதி அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாளைய தினம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர், அதன் இரண்டாவது வாசிப்பு குறித்த விவாதம் நவம்பர் 8ஆம் திகதி தொடங்கி ஒரு வாரம் முழுவதும் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது வாசிப்பு ஆரம்பமாகும் என நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

NO COMMENTS

Exit mobile version