சன் டிவியில் செஃப் வெங்கடேஷ் பட் நடத்தி வரும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
அதன் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் ஜெயிக்கப்போவது யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பெசன்ட் ரவி
இறுதியில் டைட்டில் வின்னர் ஆக பெசன்ட் ரவி அறிவிக்கப்பட்டார். அவருக்கு பரிசாக வீட்டு உபயோக பொருட்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டு இருக்கிறது.
இரண்டாம் இடம் பிடித்த ப்ரீத்தாவுக்கும் வீட்டு உபயோக பொருட்கள் தான் வழங்கப்பட்டு உள்ளது.
இலங்கையை சேர்ந்த போட்டியாளர் வாகீசன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத நிலையில் வீடியோ கான்பரென்சிங் மூலமாக கலந்துகொண்டார். அவருக்கு ஸ்டார் of சீசன் 2 என்ற பட்டம் வழங்கப்பட்டது.
