Home இலங்கை சமூகம் காவல்துறை உயரதிகாரிகள் பலருக்கு அதிரடி இடமாற்றம்

காவல்துறை உயரதிகாரிகள் பலருக்கு அதிரடி இடமாற்றம்

0

நாட்டிலுள்ள சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர உட்பட பலருக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

அவர்களில் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்கள் மற்றும் பிரதி காவல்துறைமா அதிபர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.

வழங்கப்படவுள்ள இடமாற்றங்கள்

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் (National Police Commission) அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலருக்கும் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வழங்கப்படும் இடமாற்றங்களுக்கு அமைய, காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் தங்கள் வழமையான பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version