இலங்கை மத்திய வங்கியின் (CBSL) சமீபத்திய அறிக்கையின்படி, சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கையின் வருமானம் 2024 முதல் ஆறு மாதங்களில் 1.5 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
அதன் படி, ஆண்டின் முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.01 மில்லியனை எட்டியது, இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 61.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஜூன் மாதத்தில் மட்டும், சுற்றுலா வருவாய் $113.4 மில்லியனாக பதிவாகியுள்ளதுடன், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் $100.3 மில்லியனாக பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு வருவாய்
இதேவேளை, 2024 இன் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய பணம் மொத்தம் $3.14 பில்லியன் ஆகும், இது கடந்த ஆண்டு இதே காலத்தில் $2.82 பில்லியனாக பதிவாகியுள்ளளது.
சுற்றுலா மற்றும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றங்கள் நாட்டிற்கு சிறந்த வெளிநாட்டு வருவாய் ஈட்டித் தருபவையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.