Home இலங்கை பொருளாதாரம் நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

0

செப்டம்பர் மாதத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்த்ததை விட குறைவாகவே காணப்படுவதாக அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

விசா வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் அதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுன்றது.

குறித்த தகவல்களை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

கடந்த மே மாதத்திலிருந்து விசா விநியோகிக்கும் நிறுவனம் மாறியமையால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதனைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு அதிக கட்டணம் செலுத்தவேண்டியிருந்ததுடன் பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்க வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், 39 நாடுகளின் பிரஜைகளுக்காக விசா இன்றி சுற்றுலாவை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஒக்டோபர் மாதத்திலிருந்து வழங்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனூடாக 2024 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கை நெருங்க முடியும் எனவும் பிரியந்த பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார்.

செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 92,639 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன் நாட்டிற்கு வருகை தந்துள்ள மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.45 மில்லியனை கடந்துள்ளது.

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு

இந்நிலையில், தற்போது நிலவும் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடியதாக அமைச்சர் ஊடகங்களுக்கு  (25) குறிப்பிட்டுள்ளார்.

அதன் போது, ஒக்டோபர் 15 ஆம் திகதி 20 திகதிக்கும் இடையில் அரசாங்கத்தினால் புதிய கடவுச்சீட்டுக்களை வழங்க முடியும் என பணிப்பாளர் தெரிவித்தாக அமைச்சர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version