Home இலங்கை சமூகம் நுவரெலியா – பதுளை வீதியில் வெள்ளத்தால் போக்குவரத்து தடை

நுவரெலியா – பதுளை வீதியில் வெள்ளத்தால் போக்குவரத்து தடை

0

நுவரெலியாவில் இன்று (01) பிற்பகல் பெய்த இடியுடன் கூடிய பலத்த மழை காரணமாக
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதன்படி நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு
முன்பாக வீதிகளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்ததால் அவ்வீதியைப்
பயன்படுத்துவோர் பலத்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் குறித்த வீதியில் போக்குவரத்து
பாதிக்கப்பட்டு வாகனங்கள் சிறிது நேரம் நீண்ட வரிசையில் தரித்து நின்றமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version