Home இலங்கை சமூகம் இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு

0

இஸ்ரேலில் (Israel) வேலைக்காக சென்ற இலங்கை (Sri Lanka) இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதன் போது, கண்டியில் வசித்து சந்த 35 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வேலைவாய்ப்பு

குறித்த நபர் 6 மாதங்களுக்கு முன்னர் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு வந்து விவசாயத் துறையில் பணியாற்றி வந்தாக இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த நபரின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பும் விடயம் தொடர்பில் தற்போது செயற்பட்டு வருவதாக அவர் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்துள்ளார். 

Source: https://ibctamil.com/article/tragic-decision-by-sri-lankan-citizen-in-israel-1727685378

NO COMMENTS

Exit mobile version