Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் பரிதாபமாக 12 ஆடுகள் உயிரிழப்பு

கிளிநொச்சியில் பரிதாபமாக 12 ஆடுகள் உயிரிழப்பு

0

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சோலை பல்லவராயன்
கட்டு கிராமத்தில் 12 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

இந்த சம்பவம் நேற்று(29.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மகேஸ்வரன் சத்தியா என்பவரின் வாழ்வாதாரமாக
வளர்க்கப்பட்டு வந்த 12 ஆடுகளே உயிரிழந்துள்ளன.

பொலிஸ் விசாரணை

குறித்த ஆடுகள் நேற்றைய தினம்(29) மேச்சலுக்கு சென்ற இடத்தில் சத்தியராஜ்
என்பவரின் காணிக்குள் சென்றுள்ளது.

இந்நிலையில், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரம்
கலந்த நீர் ஆடுகளுக்கு பருக வைக்கப்பட்டிருந்தமையால் 12 ஆடுகளும்
அந்த நீரை பருகி நிலையில் உயிரிழந்துள்ளன.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் பூனகரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version