சிறகடிக்க ஆசை சீரியலில் வில்லி ரோகிணி எப்போது சிக்கிக்கொள்வார் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். ஆனால் அது நடந்த பாடில்லை.
ரோகிணி பற்றிய உண்மைகள் எல்லாமே தெரிந்த நபர் மனோஜுக்கு மொட்டை கடுதாசி அனுப்பிய பிரச்சனை தான் தற்போது குடும்பத்தில் சென்றுகொண்டிருக்கிறது.
விஜய்யுடன் இணைகிறாரா அஜித், ரஜினி பட நடிகை.. யார் தெரியுமா
முத்து சொன்ன விஷயம்.. பதறிய ரோகிணி
இந்நிலையில் அடுத்த வார ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. “ரோகிணி – மனோஜ் திருமணம் அன்று தான் அந்த லெட்டர் கொடுத்தவனை பார்த்தேன். பெண்களை பற்றி தவறாக பேசியதால் துரத்தினேனே. அதன் பின் இரண்டு மாதங்களுக்கு முன் அவனை போலீசில் பிடித்து கொடுத்தேன்” என முத்து கூறுகிறார்.
அவர் மறுபடியும் மாட்டும்போது உதைத்தால் மொத்த உண்மையையும் சொல்லி விடுவான் என முத்து கூறுகிறார்.
அப்படி நடந்தால் நாம் சிக்கிக்கொள்வோமே என ரோகிணி கடும் அதிர்ச்சியில் அமர்ந்து இருக்கிறார். ப்ரோமோ இதோ.