தொடருந்து இயக்குனர்களின் பற்றாக்குறையால் முன்றாவது நாளாகவும் தொடருந்து சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இன்றையதினமும் (19) 28 தொடருந்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதான பாதையில் 16 பயணங்களும், கடலோரப் பாதையில் 8 பயணங்களும், புத்தளம் பாதையில் 4 பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சேவை ரத்துக்கள் அதிகரிப்பு
ஞாயிற்றுக்கிழமை (21) திட்டமிடப்பட்ட பதவி உயர்வு பரீட்சைக்கு தொடருந்து இயக்குனர்கள் தயாராகி வருவதால் இந்த ரத்துகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை இன்று பிற்பகல் வேளைகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொடருந்து தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.