Home இலங்கை சமூகம் அநுர கூறிய வாக்குறுதிகளை தற்போது வரை நிறைவேற்றவில்லை : மக்கள் விசனம்

அநுர கூறிய வாக்குறுதிகளை தற்போது வரை நிறைவேற்றவில்லை : மக்கள் விசனம்

0

தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய பொருட்களின் விலைகளை குறைப்பாதாக கூறிய அரசாங்கம் தற்போது வரையில் அதற்கான நடவடிக்கைகளை கூட மேற்கொள்ளவில்லை.

இவை ஒரு புறம் இருக்க கல்விக்கு ஏற்ற வேலை என ஒவ்வொரு அரசாங்கமும் கூறி வந்தாலும் அதற்கான நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கப்பட வில்லை.

உதாரணமாக, வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இன்று யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. 

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்ற நிகழ்வுகளை வேலையில்லா பட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. 

தமது பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள் மயப்படுத்தி தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வலுச்சேர்க்கும் நோக்குடன் இந்த செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

எத்தனை போரட்டங்களை செய்தாலும், எத்தனை பேர் ஆட்சி அமைத்தாலும் மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுமா என்று கேட்டால் அது கேள்வி குறிதான்….?

தற்போது நாட்டில் உள்ள பிரச்சினைகள் , பல்கலை மாணவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக ஆராய்கிறது “மக்கள் கருத்து” நிகழ்ச்சி…

https://www.youtube.com/embed/RElSgGIqX28

NO COMMENTS

Exit mobile version