Home இலங்கை அரசியல் சாதாரண மக்களுக்கு கடினமாக அமையப் போகும் வாகன இறக்குமதி

சாதாரண மக்களுக்கு கடினமாக அமையப் போகும் வாகன இறக்குமதி

0

எதிர்வரும் நாட்களில் சாதாரண மக்கள் வாகனங்களை பாவிப்பது கடினமாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்(Velusami Radhakrishnan) தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“கார் இறக்குமதி செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இவ்வாறு கார்கள் இறக்குமதி செய்யப்படுமாயின் இலங்கை ஓரிரு வருடங்களில் பழைய நிலைமைக்கு தள்ளப்படும் என
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் நிபுணரொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அவற்றையெல்லாம் அரசாங்கம் சிந்தித்து செயற்பட வேண்டும்.

ஜப்பானிலிருந்து 3 வருடங்களுக்கு மேல் பாவித்த வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

தற்போது 10 வருடங்களுக்குள் பாவித்த வாகனங்கள் தான் இறக்குமதி செய்யப்பட வேண்டுமென கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், அந்த வாகனத்தின் தரம் எவ்வாறானதாக இருக்கும், டொலரின் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் வாகனங்களை வாங்குவதே சிரமமாக உள்ளது.

இதனால் சாதாரண மக்களால் இந்த வாகனங்களை வாங்கவோ பயன்படுத்தவோ முடியாது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version