Home இலங்கை சமூகம் நீர் கட்டண திருத்தம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

நீர் கட்டண திருத்தம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

0

நாட்டில் தற்போது மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தினை வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நீர் கட்டணம் தொடர்பில் ஆராய்வதற்காக ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நீர் கட்டணம்

இதேவேளை, மின்சாரக் கட்டண திருத்தத்துடன், நீர் கட்டணங்களும் திருத்தப்பட வேண்டும் என சில தரப்பினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதற்கமைய, நீர் கட்டண திருத்தம் தொடர்பான அறிவியல் ரீதியான விடயங்களைக் கலந்துரையாடி, எதிர்காலத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனப் பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version