Home இலங்கை அரசியல் சமஷ்டி முறையிலான தீர்வை அரசியல் தீர்வாக வலியுறுத்துகிறோம்! மத்திய செயற் குழு கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன்

சமஷ்டி முறையிலான தீர்வை அரசியல் தீர்வாக வலியுறுத்துகிறோம்! மத்திய செயற் குழு கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன்

0

Courtesy: H A Roshan

இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கியமான அரசியல் தீர்வாக வலியுறுத்துவது சமஷ்டி முறையிலான ஆட்சியை தான் என முன்னாள் யாழ்.(Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று(18) இடம்பெற்ற தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வு

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“கட்சியின் ஒரே இலக்கு சமஷ்டி முறை தீர்வே ஆகும். தற்போது ஒற்றையாட்சி என்றால் என்ன சமஷ்டி முறை என்றால் என்ன என்பது பற்றிய விளக்கம் தெரிகிறது. எழுபது வருட காலமாக பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் அரசியல் தீர்வாக இதனையே வலியுறுத்தி வருகிறோம்.

கோட்டாபய அரசாங்கத்தில் இது தொடர்பான வரைபை வரைந்து இது குறித்த தீர்வு தொடர்பில் முன்மொழிவுகளை 2020 டிசம்பர் மாதமளவில் அந்த குழுவுக்கு அனுப்பியிருந்தோம்.

இதில் மறைந்த தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், அடைக்கலநாதன் போன்றோர் உட்பட கையொப்பமிட்டு அனுப்பப்பட்டு சந்திப்பு நடாத்தப்பட்டது இதனை தொடர்ந்து தற்போது ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம்.

 தமிழ் பேசும் பரப்பு

இவர்கள் இந்த விடயங்களுக்கு பொறுப்பாக இருந்து செயற்படுவார்கள். தமிழ் பேசும் பரப்பில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் இதற்கு மேலதிகமாக கட்சியின் வழக்குகளும் நிலுவையில் உள்ளது அத்தனை வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் பேசப்பட்டதுடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிகமாக முன்னுரிமை அடிப்படையில் முன்னர் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களை பட்டியலில் இணைப்பதுடன் இளைஞர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பாக பேசப்பட்டுள்ளது.

மேலும் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதுமாக பேசப்பட்ட நிலையில் முதன் முதலில் அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது, இடது சாரி கொள்கை கொண்ட இவர்கள் சீனா இந்தியா தொடர்பில் எப்படி செயற்பட போகிறார்கள் என்பது பற்றி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version