Home இலங்கை சமூகம் சில தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு…

சில தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு…

0

பதுளையிலிருந்து வந்த 1008 பயணிகள் தொடருந்து இயந்திரம் தடம் புரண்டதால் இடைநிறுத்தப்பட்டிருந்த மலையக தொடருந்து பாதையில் தொடருந்து சேவைகள் இன்று (10) காலை 8:30 மணியுடன் முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி தொடருந்து கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

நேற்று (09) மாலை 6:00 மணியளவில் நாவலப்பிட்டி பல்லேகம பகுதியில் தடம் புரண்டதால், அந்தப் பாதையில் தொடருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.

தொடருந்து தண்டவாளங்களுக்கும் சேதம் 

இதன் விளைவாக, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை கம்பளை தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

அதே நேரத்தில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை நாவலப்பிட்டி தொடருந்து நிலையத்தில் இன்று (10) காலை வரை நிறுத்தப்பட்டுள்ளது.

தடம் புரண்ட தொடருந்தின் இயந்திரம் சுமார் 270 அடி முன்னோக்கி நகர்ந்து, மலைச்சரிவில் மோதி நிறுத்தப்பட்டது என தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் தொடருந்து தண்டவாளங்களுக்கும் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version