Home இலங்கை சமூகம் தொடருந்து சேவைகள் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்

தொடருந்து சேவைகள் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்

0

இன்று (12) நண்பகல் 12 மணிக்குப் பின்னரே தொடருந்து சேவைகள் வழமைக்குத் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை தொடருந்து திணைக்கள கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கை (Sri Lanka) தொடருந்து தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தம் நேற்று (11) இரவு முதல் கைவிடப்பட்ட போதிலும்,  சில தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள், இயந்திர சாரதிகள் மற்றும் தொடருந்து நிலைய அதிபர்கள் வேலைக்கு திரும்ப வேண்டியுள்ளதாகவும், பல தொடருந்துகளில் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, நண்பகல் 12 மணிக்குப் பின்னர் தொடருந்து சேவை வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://ibctamil.com/article/train-services-to-be-back-by-noon-1720763048

NO COMMENTS

Exit mobile version