Home இலங்கை அரசியல் வடக்கு-கிழக்கு முழுவதும் கதவடைப்பு! சுமந்திரன் விடுத்துள்ள கோரிக்கை

வடக்கு-கிழக்கு முழுவதும் கதவடைப்பு! சுமந்திரன் விடுத்துள்ள கோரிக்கை

0

தமிழர் தாயகத்தில் இன்று வரைத் தொடரும் இராணுவத்தின் மிருகத்தனத்தை எதிர்த்து
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கு முழுவதும் கதவடைப்பு அனுஷ்டிக்கப்படும் போது, மக்களுக்கான அவசர சேவைகளைப் பேணுவதைப் போல், பக்தர்கள்
கோயில்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து சேவைகளையும் பேணுமாறு சம்பந்தப்பட்ட
தரப்புகளிடம் கோருகின்றோம்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,”எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கு முழுவதும் கதவடைப்பு அனுஷ்டிக்கப்படுவதற்குப் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பூரண ஒத்துழைப்பு

அவர்களுக்கு நன்றி
தெரிவிக்கும் அதேவேளையில் அன்றைய தினம் மடுமாதா கோயிலில் விசேட நிகழ்வு
நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நல்லூர் கந்தசாமி
கோயிலிலும், வேறு பல இந்துக் கோயில்களிலும் திருவிழாக்களும் நடைபெறுகின்றன.

இவற்றை அனுசரித்து, மக்களுக்கான அவசர சேவைகளைப் பேணுவதைப் போல்,
விதிவிலக்காகப் பக்தர்கள் கோயில்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து
சேவைகளையும் பேணுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் கோருகின்றோம்.

அது தவிர்ந்து, மற்றைய அனைத்து தரப்புக்களையும் இந்தக் கதவடைப்புக்கு பூரண
ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.”என்றுள்ளது.

NO COMMENTS

Exit mobile version