Home இலங்கை அரசியல் இலங்கையில் தேர்தல் கால ஆர்ப்பாட்டங்கள் குறித்து வெளிநாடுகள் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையில் தேர்தல் கால ஆர்ப்பாட்டங்கள் குறித்து வெளிநாடுகள் விடுத்துள்ள அறிவிப்பு

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வெளிநாடுகளால் பயண ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின் போதும், அதன் பின்னரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமது நாட்டவர்களுக்கு வெளிநாடுகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளன.

செப்டம்பர் 21 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்றும் அதன்போது பொது ஆர்ப்பாட்டங்கள் நடக்கலாம் என்றும், வன்முறையாக மாறலாம் என்றும் அவுஸ்திரேலியா தமது நாட்டவர்களுக்கு அறிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்கள்

எனவே ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் என்று அவுஸ்திரேலியா கூறியுள்ளது.

இலங்கையில் தேர்தல் காலத்தில் அரசியல் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் என்று அயர்லாந்து கூறுகிறது.

எனவே இலங்கைக்கு பயணிக்கும் தமது நாட்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், ஆர்ப்பாட்டங்களை தவிர்க்க வேண்டும் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைகளை கண்காணிக்க வேண்டும் என்று அயர்லாந்து வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை செப்டெம்பர் 21 அன்று ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற உள்ளதாகவும், தேர்தலுக்கு முன்னரும்;, தேர்தலின் போதும், பின்னரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் என்றும் கனடா குறிப்பிட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version