Home இலங்கை சமூகம் பதிவு செய்யாத கையடக்க தொலைபேசி கண்காணிக்க புதிய மென்பொருள்

பதிவு செய்யாத கையடக்க தொலைபேசி கண்காணிக்க புதிய மென்பொருள்

0

இலங்கையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தப்படும் கையடக்க தொலைபேசி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவ்வாறு அனுமதியற்ற கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்துவதை தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் கொள்வனவு செய்ய வேண்டாம் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


ஒழுங்குமுறை ஆணைக்குழு

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத்,

“எங்கள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத எந்த கையடக்க தொலைபேசிகளையும் வாங்க வேண்டாம் என்று பொதுமக்களை நாங்கள் தயவு செய்து கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிளை பயன்படுத்துவதை தடுக்க விரைவில் ஒரு புதிய தானியங்கி அமைப்பை நாங்கள் செயல்படுத்துவோம்.


கையடக்க தொலைபேசி

அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகளால் நமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளை குறைப்பதும், நாட்டில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களை பாதுகாப்பதும் இதன் நோக்கமாகும்.

இது அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகள் மூலம் நடத்தப்படும் சமூக விரோத செயல்களையும் குறைக்கும். அத்துடன் கையடக்க தொலைபேசிகள் மூலம் சட்டவிரோத பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண முடியும்.

அதன்படி, சந்தையில் சட்டப்பூர்வ கையடக்க தொலைபேசிகளின் பெருக்கம் காரணமாக எதிர்காலத்தில் விலைகள் குறைய அதிக வாய்ப்பு உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version