Home இலங்கை அரசியல் இலங்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்பின் உத்தரவு

இலங்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்பின் உத்தரவு

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட உத்தரவு காரணமாக, இலங்கை
உட்பட்ட பல நாடுகளிலும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

அனைத்து கூட்டாட்சி மானியங்கள் மற்றும் கடன்களையும் இடைநிறுத்த வெள்ளை மாளிகை
மதிப்பீட்டு அலுவலகம் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டது.

இது, நேற்று (28)  மாலை 5 மணிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அரச மற்றும் அரச சார்பற்ற திட்டங்கள்

இந்த உத்தரவின்படி, அமெரிக்க கூட்டாட்சி நிறுவனங்கள், அனைத்து கூட்டாட்சி நிதி
உதவிகளின் கடமை அல்லது வழங்கல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக
இடைநிறுத்த வேண்டும் என்று வெள்ளை மாளிகை நிர்வாக அலுவலகத்தின் நிர்வாக
மற்றும் மதிப்பீட்டின் செயல் இயக்குநர் மேத்யூ வேத் அறிவித்திருந்தார்.

எனினும் இந்த இடைநிறுத்தம் சமூகப் பாதுகாப்பு அல்லது மருத்துவக் காப்பீட்டு
சலுகைகளைப் பாதிக்காது என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த உத்தரவு காரணமாக இலங்கையில் முன்னெடுக்கப்படும் அரச
மற்றும் அரச சார்பற்ற திட்டங்களுக்கான அமெரிக்க நிதியுதவிகளிலும் தற்காலிக
முடக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், குறித்த தற்காலிக இடைநிறுத்தம், நிதித் திட்டங்களை மதிப்பாய்வு
செய்யவும், அந்த திட்டங்களுக்கான நிதியின் சிறந்த பயன்பாடுகளைத்
தீர்மானிக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version