Home தொழில்நுட்பம் ‘IMEI’ பதிவு தொடர்பில் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு ஒரு அறிவித்தல்

‘IMEI’ பதிவு தொடர்பில் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு ஒரு அறிவித்தல்

0

இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் ‘IMEI’ என்ற சர்வதேச மொபைல் சாதன அடையாளப் பதிவுகளைக்கொண்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரம் வாங்குமாறு ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுள்ளது.

இது தொடர்பில் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்திக்குறிப்பு ஒன்றை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, பதிவுசெய்யப்படாத ‘IMEI’ -இயக்கப்பட்ட மொபைல் சாதனங்கள், எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு இயக்குநர் வலையமைப்புக்களில் இருக்காது என்று ஆணைக்குழு அந்த குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் அறிவிப்பு 

இருப்பினும், 2025 ஜனவரி 28ஆம் திகதிக்கு முன்னர் தொலைத்தொடர்பு இயக்குநர்களின் வலையமைப்புக்களில் ஏற்கனவே இணைக்கப்பட்ட ‘IMEI’ இயக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளுக்கு தமது அறிவிப்பு பொருந்தாது என்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version