Home இலங்கை சமூகம் அரிசி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! விவசாய அமைச்சு வழங்கிய உறுதி

அரிசி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! விவசாய அமைச்சு வழங்கிய உறுதி

0

அரிசி தொடர்பான பிரச்சினைகள் இன்னும் 3 வாரங்களில் தீர்க்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார்.

அதன்படி, நெல்லுக்கான உத்தேச விலையை வழங்க அரசாங்கம் துரிதமாகச் செயற்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உடனடித் தீர்வு

நாட்டின் பல பகுதிகளில் வனவிலங்குகளினால் பயிர்கள் மற்றும் உடமைகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறுகள் ஏற்படுள்ளது.

மேலும், கடந்த காலங்களில் பெய்த கனமழையால், சிறு ஓடை நிரம்பி, நெற்பயிர்கள் நாசமாகியுள்ளதாகவும் இதற்கு உடனடித் தீர்வு எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version