யாழ்ப்பாணம் (Jaffna) – கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் (Food City) சுகாதார சீர்கேடுகளுக்கு தண்டம்
விதிக்கப்பட்டுள்ளது.
கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தன் கோண்டாவில் பகுதிகளில்
உள்ள பூட்சிற்றிகளில் வண்டுமொய்த்த திகதி காலாவதியான பொருட்கள் விற்பனை
செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தனின்
ஆலோசனையிலும் வழிகாட்டலிலும், க. ஜெகானந்தன் தலைமையிலான குழுவினரால் குறித்த
பூட்சிற்றிகள் (18.12.2024) தினம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
காலாவதியான பொருட்கள்
இதன்போது, திகதி காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்களை விற்பனைக்காக
வைத்திருந்த இரு பூட்சிற்றிகள் இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தன்,
பூட்சிற்றி முகாமையாளர்களிற்கு எதிராக நேற்றையதினம் (06.01.2024) வழக்கு தாக்கல்
செய்தார்.
மேலும், வழக்கினை அன்றையதினமே விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான்
முகாமையாளர்களிற்கு 60,000/=, 30,000/= தண்டம் விதித்து தீர்ப்பளித்ததுடன்
கடுமையான எச்சரிக்கையையும் வழங்கியுளடளார்.
you may like this,
https://www.youtube.com/embed/UVk7gzmgfMQ