நடிகர் அஜித் தற்போது துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் இன்று பயிற்சி மேற்கொண்டு இருந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கியது.
கார் தடுப்பில் மோதி நொறுங்கிய நிலையில் அஜித் காயங்கள் எதுவும் இன்றி காரில் இருந்து இறங்கி சென்று இருக்கிறார். அந்த வீடியோவும் முன்பு வெளியாகி வைரல் ஆனது.
தற்போதைய உடல்நிலை
இந்நிலையில் அஜித்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது என அவரது மேனேஜர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
“அஜித் முற்றிலும் நலமாக இருக்கிறார், விபத்துக்கு பின் அவரே தான் காரில் இருந்து இறங்கி வந்திருக்கிறார். அவர் நாளையே மீண்டும் பயிற்சியை தொடங்க இருக்கிறார்” என அவர் கூறியுள்ளார்.