Home முக்கியச் செய்திகள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

0

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு (Johnston Fernando) எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ (BMW) வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த குற்றச்சாட்டுக்கமைய அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் அறிவுறுத்தல் 

இந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு ஜோஸ்டன் பெர்னாண்டோவுக்கு, குருநாகல் (Kurunegala) காவல்துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எனினும் இதுவரை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குப் பிரவேசிக்காத நிலையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வசிக்கும் அனைத்து வீடுகள் மற்றும் இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version