Home இலங்கை சமூகம் திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! சம்பவ இடத்திற்கு சென்ற அநுர தரப்பு எம்.பி விரட்டியடிப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! சம்பவ இடத்திற்கு சென்ற அநுர தரப்பு எம்.பி விரட்டியடிப்பு

0

திருகோணமலையில்  சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை அமைந்துள்ள இடத்திற்குச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன விரட்டியடிக்கப்பட்டுள்ளார். 

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை தொடர்பில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டிருந்த சூழலில் குறித்த பகுதியில் ஒன்று திரண்டிருந்த பௌத்த தேரர்கள் மற்றும் பெரும்பான்மை இன மக்களால் பதற்றமான சூழல் நிலவியது.

கடுமையாக விமர்சித்தனர்.. 

இந்தநிலையில் சம்பவ  இடத்திற்குச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமனவை அங்கு ஒன்று திரண்டிருந்த பௌத்த மக்கள் கடுமையாக விமர்சித்தனர். 

தவறான வார்த்தைகளால் அவரை பேசியதுடன், அங்கிருந்து அவர் வெளியேறும் வரை கூச்சலிட்டுள்ளனர். 

மேலும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவையும் கடும் வார்தைகளால் அவர்கள் விமர்சித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version