Home இலங்கை அரசியல் சாணக்கியன் மகிந்தவுடன் இருந்த போது விகாரைக்கு வழங்கப்பட்ட அனுமதி!

சாணக்கியன் மகிந்தவுடன் இருந்த போது விகாரைக்கு வழங்கப்பட்ட அனுமதி!

0

திருகோணமலையில் புத்தர் சிலை அமையப்பெற்ற நிலத்துக்கான பத்திரம், 2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் வழங்கப்பட்டது.

அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மகிந்தவின் கட்சியில் ஒரு முக்கிய பிரமுகராக இருந்ததாக அரசியல் மற்றும் சிவில் செயற்பாட்டாளர் கந்தையா அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்க, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவை விமர்சிப்பதற்கு சாணக்கியனுக்கு என்ன தகுதி உள்ளது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் திருகோணமலை புத்தர் சிலைக்கு ஆதரவான கருத்து தன்னை ஆச்சரியப்படுத்தவில்லை, அவர் அப்படியானவர் தான் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோர் காலத்துக்கு காலம் தங்கள் வாய்ப்புக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்வார்கள் என அவர் கூறியுள்ளார்.

இவை தொடர்பில் ஊடறுப்பு நிகழ்ச்சியில் விரிவாக ஆராய்கையில்,

 

NO COMMENTS

Exit mobile version