Home இலங்கை சமூகம் திருகோணமலையின் 2024ஆம் ஆண்டுக்கான மாவட்ட தொழிற்சந்தை

திருகோணமலையின் 2024ஆம் ஆண்டுக்கான மாவட்ட தொழிற்சந்தை

0

Courtesy: H A Roshan

திருகோணமலை (Trincomalee) மாவட்ட செயலக தொழில் நிலையத்தின் ஏற்பாட்டில் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் 2024ஆம் ஆண்டுக்கான தொழிற்சந்தை நேற்று (10) மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி. கலந்து கொண்டுள்ளார்.

கலந்து கொண்டோர் 

இந்நிகழ்வில், தொழில் வழங்குனர்களாக தனியார் நிறுவனமும் உள்ளூர் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் பல தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ். குருகுலசூரிய, துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version