Home இலங்கை சமூகம் திருகோணமலையில் பரபரப்பு! இரவோடு இரவாக அகற்றப்பட்ட புத்தர் சிலை

திருகோணமலையில் பரபரப்பு! இரவோடு இரவாக அகற்றப்பட்ட புத்தர் சிலை

0

திருகோணமலை கடற்கரை அருகில் சட்டவிரோத கட்டடப்பட்டு வரும் பௌத்த மதஸ்தலத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது.

புத்தர் சிலையை வைத்ததற்காக அப்பகுதியல் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, காவல்துறையினரால் குறித்த சிலை அகற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த பகுதியில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவுதால், காவல்துறை மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

தொடரப்பட்ட வழக்கு

இந்நிலையில், சம்பந்தப்பட்ட சட்டவிரோத கட்டுமானப்பணிகள் தொடர்பாக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் திருகோணமலை துறைமுக காவல்நிலையத்தில் இன்று (16.11.2025) முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடத்தின் கட்டுமான பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் இது தொடர்பாக நீதிமன்றில் காவல்துறையினரால் வழக்கு தொடரப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version