Home இலங்கை சமூகம் இந்தியாவுக்கு காணிகளை தாரை வார்க்காதே! முத்து நகரில் மக்கள் போராட்டம்

இந்தியாவுக்கு காணிகளை தாரை வார்க்காதே! முத்து நகரில் மக்கள் போராட்டம்

0

திருகோணமலை (Trincomalee) மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து
நகர் பகுதி மக்களால் இந்தியாவிற்கு (India) காணிகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, இன்று (16) இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில், வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனங்களுக்கு மக்கள் காணிகளை
துறைமுக அதிகார சபையினர் குத்தகைக்கோ அபகரிப்பு செய்யவோ விட கூடாது என வலியுறுத்தி மக்கள்
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எங்கள் நிலம் 

இதன்போது, “இந்தியாவிற்கு (India) காணிகளை விற்காதே எங்கள்
நிலம் எங்களுக்கு” போன்ற வாசகங்களை ஏந்தியவாரு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதுடன், கப்பல் துறை, முத்து நகர் போன்ற
பகுதியில் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இக் காணிகள் இலங்கை (Sri Lanka) துறைமுக அதிகார சபைக்கு சொந்தமானது என அதனை வெளிநாடுகளுக்கு தாரைவார்க்க
வேண்டாம் என மக்கள் தெரிவித்துள்ளளனர்.

இது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு
தொடரப்பட்டுள்ள போதிலும் குறித்த பகுதிக்குள் மக்கள் கவனயீர்ப்பு
போராட்டங்களை முன்னெடுக்க முடியாது என திருகோணமலை நீதிமன்ற நீதவானால் தடை
உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என சீனக்குடா காவல்துறையினர் நால்வர் அடங்கிய பெயரை
குறித்து தடை உத்தரவை வழங்கியுள்ளதாக குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்ட சிறிலங்கா லங்கா
சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன் கூறியுள்ளார்.

மின்சார காற்றாலை

அவர் மேலும் தெரிவிக்கையில், ”குறித்த முத்து நகர் மற்றும் கப்பல் துறை பகுதிகளில் மக்கள் 1972ம் ஆண்டு
பிரதமராக செயற்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் (Sirimavo Bandaranaike) குடியேற்றம்
செய்யப்பட்டிருந்தது.

விவசாயத்தை நம்பி வாழும் மக்களை தற்போது மீள் எழுப்பி
இந்தியாவுக்கு மின்சார காற்றாலை உற்பத்திக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்குவது
மக்களை நசுக்கும் செயலாகும்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version