Home இலங்கை சமூகம் திருகோணமலை மாநகர சபை முதல் அமர்வு

திருகோணமலை மாநகர சபை முதல் அமர்வு

0

திருகோணமலை நகர சபையானது மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டு அதன் முதலாவது அமர்வு நடைபெற்றுள்ளது.

முதல்வர் க.செல்வராஜா தலைமையில் நேற்று(30) நடைபெற்ற குறித்த அமர்வில் உறுப்பினர்கள் அனைவரும் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது, தனது கன்னி உரையை
ஆரம்பித்த முதல்வர், மக்களின் இறையாண்மையை பாதிக்காதவகையிலும், அனைத்து மாநகர
மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலும் உறுப்பினர்கள் சேவையாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அர்ப்பணிப்பு

அத்துடன், சிறந்த சுற்றுலா
மாநகரமாக மாற்றியமைக்கவும் உறுப்பினர்கள், செயலாளர் மற்றும்
உத்தியோகத்தர்கள் என நாங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற
முன்வரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

NO COMMENTS

Exit mobile version