கடந்த 28ஆம் திகதி முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர் அவர் தடுத்த வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
கேகாலையை சேர்ந்த பண்டார என்பவர் காணாமல் போனமை தொடர்பாகவே, முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நிஷாந்த கைதின் பின்னர், விசாரணைகளில் அவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களில் ஒன்று ஈழத்தமிழர்களோடு மிக நெருக்கமாக பார்கப்பட வேண்டிய ஒன்று.
தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் திருமலையில் உள்ள கடற்படை முகாம், வதைமுகாமாக செயற்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
அது மாத்திரமன்றி ரஜீவன் உள்ளிட்ட 5 இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பிலும் பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகியுள்ளன.
குறித்த விடயங்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
