Home உலகம் ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைனின் ட்ரோன் – தவறிய தாக்குதல் இலக்கு : வைரல் காணொளி

ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைனின் ட்ரோன் – தவறிய தாக்குதல் இலக்கு : வைரல் காணொளி

0

ரஷ்யாவிற்குள் (Russia) நுழைந்த உக்ரைனின் “காமிகேஸ்” ஆளில்லா விமானம் ரஷ்யாவில் விழுந்து விபத்துக்குள்ளான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள ஒரு ஏரியில் உக்ரைனின் “காமிகேஸ்” ஆளில்லா விமானம் (UAV) விழுந்து வெடித்து சிதறியுள்ளது.

இது தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியில், ஆளில்லா விமானம் ஏரியில் விழுவதற்கு முன், பெரும் புகை மண்டலமும் தீப்பிழம்பும் எழுவதை பார்க்க முடிகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், தங்கள் படைகள் அதை இலக்கை அடைவதற்கு முன்பே வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததாகத் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version