Home இலங்கை சமூகம் திருமலையில் காவல்துறையுடன் முரண்பட்ட அறுவர் அதிரடி கைது!

திருமலையில் காவல்துறையுடன் முரண்பட்ட அறுவர் அதிரடி கைது!

0

திருகோணமலையில் சீருடையில் இருந்த காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – நிலாவெளியில் இளைஞர்கள் குழுவொன்று இருகாவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதைக் காட்டும் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வந்தது.

கைது நடவடிக்கை

இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர், மார்ச் 31 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 3, 2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

இதன்போது, 10 பேர் கொண்ட குழு காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து பின்னர் அவர்களைத் தாக்கியுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், நிலாவெளி காவல் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு நேற்று (01) ஒரு பெண் சந்தேக நபரையும் 05 சந்தேக நபர்களையும் கைது செய்தது.

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண் 35 வயதுடையவர் என்றும், சந்தேக நபர்கள் 20, 21, 22, 28 மற்றும் 45 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் நிலாவெளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் அவர்களைக் கைது செய்ய நிலாவெளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.youtube.com/embed/p1ehH0muR8o

NO COMMENTS

Exit mobile version