Home முக்கியச் செய்திகள் திருகோணமலை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கப்பல்

திருகோணமலை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கப்பல்

0

காலி(galle) கடற்பகுதியில் கப்பலொன்றுடன் பல நாள் மீன்பிடிக்கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய கப்பல் கடல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருகோணமலை(trincomale) துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

லிபியாவில்(Libya) இருந்து பங்களாதேஷுக்கு(bangladesh) உர சுமை ஏற்றிச் சென்ற “கொமண்டர்-கே” (COMMANDER-K)என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தபோது காலி துறைமுகம் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த தடுப்புக்காவல் மேற்கொள்ளப்பட்டதாக திருகோணமலை துறைமுக பிரதி மாஸ்டர் கப்டன் ஷிரியந்த ஆரம்பத் தெரிவித்தார்.

கப்டனிடம் வாக்குமூலம்

காலி துறைமுக காவல்துறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் திருகோணமலை துறைமுக காவல் நிலைய பிரதான பரிசோதகர் ஆர்.ஏ. ரணவீர உள்ளிட்ட காவல்துறை குழு தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பலுக்குச் சென்று அதன் கப்டனிடம் வாக்குமூலம் பதிவு செய்தது.

எரிபொருள் நிரப்புவதற்காக திருகோணமலை துறைமுகத்திற்கு வரும் வரை தனது கப்பல் மீன்பிடிக் கப்பலுடன் மோதியமை தனக்குத் தெரியாது என்று கப்டன் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version